சென்சார் ஆகிவிட்டதா ‘ஈஸ்வரன்’ திரைப்படம்: சமூக வலைத்தளத்தில் கசிந்த தகவல்!

புதன், 30 டிசம்பர் 2020 (17:26 IST)
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதே தினத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் படக்குழுவினர்களால் செய்யப்பட்டு வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் வரும் ஜனவரி 2ம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டதாகவும் இந்த படத்திற்கு யூ சான்றிதழை சென்சார் அதிகாரிகள் தந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல்களை இன்னும் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஈச்வரன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் சான்றிதழ் ஆகிய விவரங்களை படக்குழுவினர் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் மோதுவது உறுதி என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்