‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த சசி தரூர்

வியாழன், 26 அக்டோபர் 2017 (12:09 IST)
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர், ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.




‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்கச்சொல்லி பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் குரல் கொடுத்தனர். இதற்கு எதிராகவும், ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும் பலரும் தங்களுடைய சப்போர்ட்டை அளித்தனர். இதனால், இந்த விஷயம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூட ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்.பி.யான சசி தரூர், ‘மெர்சல்’ படத்துக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்துக்கு வெளியே பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமையை வலியுறுத்தி ‘மெர்சல்’ படத்தின் பெயரை பெயிண்டால் வரைந்துள்ளார் சசி தரூர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்