கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் இன்னும் கலந்துகொள்ளவில்லை.
கடந்த மாத இறுதியில் தொடங்கிய ஷூட்டிங் ஒரு வாரம் நடந்தது. அதன் பின்னர் இப்போது இயக்குனர் ஷங்கர் தன்னுடைய தெலுங்கு பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் இந்தியன் 2 அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சென்னையின் பிரபல ஸ்டியோக்களில் ஒன்றான பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமான காட்சிகள் அனைத்தும் இதில்தான் அடுத்து படமாக்கப் பட உள்ளதாம்.
இந்த படத்துக்காக ஷங்கர் மாதத்தில் 10 நாட்கள் ஒதுக்கியுள்ளாராம். அதில் அவர் கமல் சம்மந்தமான காட்சிகளை படமாக்குவாராம். கமல் இல்லாத காட்சிகளை படமாக்க இயக்குனர்கள் வசந்தபாலன், அறிவழகன் மற்றும் சிம்புதேவன் ஆகியோரை துணைக்கு அழைத்துள்ளாராம். இவர்கள் இரண்டாம் யூனிட் இயக்குனர்களாக பணியாற்ற உள்ளார்களாம்.