ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் ஒரு ஆச்சரியம்: செல்வராகவன் அறிவிப்பு

சனி, 2 ஜனவரி 2021 (07:45 IST)
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது
 
இந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் 
 
முதல் பாகத்தில் கார்த்தி, பார்த்திபன், ரியாசென், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
கிட்டத்தட்ட ஒரு வருஷம் இந்த படத்திற்காக ஆரம்பகட்ட பணிகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் இந்த படம் தமிழில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் நடிகர் தனுஷும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகள் கழித்து ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு சினிமா ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்