ஜூன் மாதம் ஒளிபரப்பாக வேண்டிய பிக்பாஸ் 4 சீசன் கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வுகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் வந்ததிகளாக ஏற்கனவே அடிபட்டுவிட்டது.
இதில் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் இருவரும் உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்ப்போது சஞ்சீவ், ஆல்யா இருவரும் இணைந்து கமலஹாசனுக்காக நடனமாடிய வீடியோ என கூறி இன்ஸ்டாவில் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். இது நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஷோவிற்கு ஆடியது தானே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.