சமந்தாவின் ஐந்து மொழி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

திங்கள், 6 டிசம்பர் 2021 (18:56 IST)
ஐந்து மொழிகளில் நடிகை சமந்தா நடிக்கும் படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது அதிக படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்தநிலையில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகும் படத்தில் சமந்தா நடிக்க உள்ளார்
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யசோதா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
சமந்தாவுடன், உன்னி முகுந்தன், வரலட்சுமி உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த படத்தை கிருஷ்ணபிரசாத் என்பவர் இயக்கவுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்