“சொல்லவேண்டியதை சொல்லிவிட்டோம்…” விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா!

திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (15:26 IST)
நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து இன்று வரை ரசிகர்களிடம் பேசு பொருளாக இருந்து வருகிறது.

நடிகை சமந்தா கடந்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அதே போல நாக சைதன்யாவும் அடுத்தடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனாலும் அவ்வப்போது விவாகரத்து குறித்த செய்திகளை இருவருமே எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது விவாகரத்து குறித்து பேசிய அவர் “திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் இல்லை என்றால் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் இந்த முடிவு கடினமானதாக இருந்தது. ஆனால் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன். மேலும் எப்போதையும் விட வலிமையாக உள்ளேன். இந்த வாழ்க்கை இப்போது எனக்கு வசதியாகவே உள்ளது” எனக் கூறியிருந்தார்.

அதையடுத்து தற்போது இப்போது நாக சைதன்யாவும் இதுகுறித்து பேசியுள்ளார். அதில் “நாங்கள் இருவருமே அந்த கட்டத்தில் இருந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துவிட்டோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தலைப்பு செய்தியாவதை நான் விரும்பவில்லை. ஆனால் எனது தொழிலில் அதுவும் ஒரு பகுதியாக உள்ளது. நாங்கள் விவாகரத்து பற்றி சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்