சமந்தா நடித்துள்ள 24 படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் விஜய்யுடன் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட்லுக்கும், அப்படத்தின் பெயரும் வெளியாகிறது. நவம்பர் 27 தங்கமகன் படத்தின் இசை வெளியிடப்படுகிறது.
இந்த மூன்றில் இரண்டு படங்களில் ஏமி ஜாக்சனும் நடித்துள்ளார். அத்துடன், தங்கமகனின் இசை வெளியாகிற அதேநாள் - நவம்பர் 27 - ஏமி ஜாக்சன், உதயநிதி நடித்துள்ள கெத்து படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிறது.