சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சாய்பல்லவியிடம் அவர் படித்த மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போனது குறித்துக் கேள்வி எழுப்பியபோது ‘நான் இப்போதெல்லாம் பிராக்டிஸ் செய்ய மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. என்னிடம் இருந்த சில திறமைகள் என்னை விட்டு போவதை உணர்ந்திருக்கிறேன். நான் இப்போது மருத்துவமனைக்கு சென்றால் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் யாரும் நான் தரும் மருத்துவ சீட்டை வாங்கமாட்டார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.