ஆனால் கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவருக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை. குறிப்பாக விஜய் பெயரில் அவர் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சம்மந்தமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே வேறுபட்ட கருத்துகள் எழுந்ததும், எஸ் ஏ சி தன் கருத்தை விஜய் மேல் திணிப்பதுமே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் மு களஞ்சியம் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய் பற்றியும் எஸ் ஏ சி பற்றியும் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “கோயம்புத்தூர் மாப்ள படத்துக்கு விஜிபியில் ஷூட்டிங் நடந்தது. அப்போது விஜய்க்கு ரூம் போடவில்லை. ஆனால் ஹீரொயினுக்கு ரூம் போட்டிருந்தார்கள். சாலையில் உட்காரவைத்து விஜய்க்கு மேக்கப் போட்டார்கள். அதனால் அவர் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் விஜய்யின் அப்பா எஸ் ஏ சி சார் அங்கு வந்தார். அவர் பின்னாலேயே விஜய்யும் வந்தார். அப்போது எஸ் ஏ சி, விஜய்யை எல்லோர் முன்னாலும் அறைந்துவிட்டார். ஏண்டா உனக்கு ரூம் போடலன்னா, அத மனசுக்குள்ளயே வச்சிகிட்டு ஜெயிச்சுக் காட்டணும் வெறி வரணுமா? இல்ல ஷூட்டிங் ஸ்பாட்ட விட்டு ஓடுவருவியா என சொன்னார். அதன் பின்னர் விஜய் எதுவுமே நடக்காதது போல ஷூட்டிங்கில் நடித்தார்” எனக் கூறியுள்ளார்.