விநாயகர் சதுர்த்தியில் மோகன்ஜி சர்ப்ரைஸ்!? – ருத்ர தாண்டவம் முதல் சிங்கிள் ரிலீஸ்!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (12:24 IST)
மோகன் ஜி இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ருத்ர தாண்டவத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.

திரௌபதி இயக்குனர் மோகன் ஜி எழுதி இயக்கியுள்ள இரண்டாவது படம் “ருத்ர தாண்டவம்”. இந்த படத்தில் திரௌபதியில் நடித்த ரிச்சர்டே நாயகனாக நடித்துள்ளார். வில்லன் கதாப்பாத்திரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10 அன்று அம்மாடி என்ற முதல் பாடல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்