ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறாத ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘இரவின் நிழல்!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:52 IST)
ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள திரைப்படங்களின் பட்டியலில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் உள்பட பல படங்கள் இருந்தன 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு செல்ல உள்ள படங்களின் பட்டியலில் குஜராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது 
 
செல்லோ ஷோ என்ற குஜராத்தி  படம்தான் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் நிழல் மற்றும் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்பட மற்ற அனைத்து படங்களும் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்