உணவு ஆர்டர் செய்த இளம் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம்: ஜொமைட்டோ ஊழியர் கைது!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:02 IST)
உணவு ஆடை செய்த இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஜொமைட்டோ ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஜொமைட்டோவில் இரவு உணவு ஆர்டர் செய்தார். அந்த உணவை 40 வயதான ரயீஸ் ஷேக் என்பவர் டெலிவரி செய்ய வந்தபோது அந்த பெண்ணின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தார் 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்  அலறியதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஜொமைட்டோ ஊழியரை சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் 
 
காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து அவர் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்