ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்கை வெளிச்சம் போட்டு காட்டிய ரித்திகா சிங்!

சனி, 18 மே 2019 (10:41 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர்  தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் நிஜ குத்து சண்டை வீராங்கனை என்பதாலே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மெருக்கேற்றி வருகிறார். அந்தவகையில் கடினமாக உடல் பயிற்சி மேற்கொண்டு  சிக்ஸ் பேக் வைத்துள்ள ரித்திகா அதனை புகைபடமெடுத்து  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிள்ளார். 

கவர்ச்சியான இவரின் உடலமைப்பை கண்ட அவரின் ரசிகர்கள் பலர் விரும்பி வந்தாலும், ஒரு சிலரோ உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று ஷாக்கடைந்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்