தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் மற்றும் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட கனா போன்ற படங்களில் நடித்து தொடர் ஹிட் அடித்ததுடன் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையானார்.
கோலிவுட் சினிமா மட்டுமின்றி டோலிவுட்டில் நடிக்கவிருக்கும் அவர் சமீப காலமாக அல்டரா மாடர்னாக திரிந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஸ்டைலிஷ் பேஷன் உடை என்று கூறி வித்யாசமான புடவை அணிந்து படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். அதில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு அதற்கு மேல் புடவைக்காட்டியுள்ள அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.