மீண்டும் இயக்குனராகும் நடிகை ரேவதி… கதாநாயகியாக கஜோல்!

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (09:39 IST)
நடிகை ரேவதி மலையாளம் மற்றும் இந்தியில் சில படங்களை இயக்கி இருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 80 கள் மற்றும் 90களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரேவதி. அதன் பின்னர் குணச்சித்திர வேடத்த்துக்கு தன்னை மாற்றிக்கொண்டு அதிலும் கலக்கினார். ஆனால் அவர் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது பெருவாரியான ரசிகர்கள் அறியாதது.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளாராம். இந்த முறை பாலிவுட் ஹீரோயின் கஜோல் அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தைப் பற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்