கமலின் ''விக்ரம்'' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு?

புதன், 16 பிப்ரவரி 2022 (17:09 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'விக்ரம்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
 
இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வந்தது. அங்கு சண்டைக் காட்சிகளை படமாக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். இப்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் படத்தில் கமலின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கமல் போலிஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில், விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்க் இம்மாதத்திற்குள் முடியவுள்ளதாகவும்,  இப்படத்தை  வரும் ஏப்ரல் மாதம் 28  ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

#Vikram planning april 28th release in theatres... pic.twitter.com/cW4GFSzB7d

— Karthik Ravivarma (@Karthikravivarm) February 16, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்