மன்றத்தை கலைத்த கையோடு மேற்கு வங்கம் செல்லும் ரஜினிகாந்த்! – ஷூட்டிங் ஆரம்பம்!
திங்கள், 12 ஜூலை 2021 (16:20 IST)
தான் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்த ரஜினிகாந்த் தந்து மக்கள் மன்றத்தை கலைத்த நிலையில் நாளை மறுநாள் மேற்கு வங்கம் செல்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ரஜினிகாந்த் பின்னர் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடும் முடிவில் பின்வாங்கினார்.
இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளதுடன், தனது ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை மறுநாள் தனி விமானம் மூலமாக ரஜினிகாந்த் மேற்கு வங்கம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசியலில் முழுவதும் முடிவு சொல்லிவிட்ட நிலையில் அண்ணாத்த இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மேற்கு வங்கம் செல்கிறார்.