'புஷ்பா’ ரிலீஸ் உரிமையையும் பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:00 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஒருசில ஏரியாவின் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் புஷ்பா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும், இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் டிசம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்