மணமகன் தேவை... மாட்ரிமோனிக்கு போட்டோ வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்!

புதன், 23 டிசம்பர் 2020 (19:09 IST)
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
 
இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி  இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து  எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 , துல்கர் சல்மான் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் நடித்து வருகிறார். 
 
தனது ட்விட்டர் பக்கத்தில் சுடிதார் அணிந்துக்கொண்டு ஹோம்லி லுக்கில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டு " மணமகன் தேவை "என்று மேட்ரிமனிக்கு அனுப்புவது போல் உள்ளது என கூறி கிண்டலாக கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். உடனே அவரது தீவிர ரசிகர்கள் அப்ளிகேஷன் போட்டு தள்ளியுள்ளனர் 

‘Prospective grooms are welcome’ pose

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்