காலக்கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழின் 'நோ நான்சென்ஸ்' நடிகர் என்று சொல்லக் கூடிய, ஒன்றிரண்டு நல்ல நடிகர்களில் பிரசன்னாவும் ஒருவர். அவருக்கு தமிழில் படங்களில்லை என்பது காலக்கொடுமை அன்றி வேறென்ன.
இந்தப் படத்தில் பிரசன்னாவுடன் கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் நடிக்கின்றனர். இதுதவிர நிபுணன் என்ற படத்திலும் பிரசன்னா நடித்து வருகிறார். பிரசன்னா போன்ற நடிகர்களை தமிழ் சினிமா தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.