விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் ப்ரதீப் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக சொல்லி பெண்கள் எல்லாம் சிவப்பு கொடி தூக்கியதால் ப்ரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து மாயா அண்ட் கேங்கின் மீது ப்ரதீப் ரசிகர்களும் கடுப்பில் இருந்த நிலையில் கடந்த வாரம் மாயா கேங்கில் இருந்த ஐஷூ எவிக்சனில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐஷூ தன்னை சரியான பாதையில் செலுத்த முயன்ற ப்ரதீப், விசித்திரா, மணி, அர்ச்சனா ஆகியோரை தான் தவறாக எண்ணி விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ள ப்ரதீப் ஆண்டனி “சரி.. ஜாலியா இருந்துச்சு. இப்போ ஒரு 4, 5 தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேக்குறாங்க. நான் கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு கெளம்புறேன். நாலு வெளிநாட்டு படங்களை பாத்து, திருடி ஒரு நல்ல ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி படத்தோட வறேன். ஆள விடுங்க நீங்களாச்சு.. உங்க பிக்பாஸ் ஆச்சு” என்று தெரிவித்துள்ளார்.