பிரகாஷ்ராஜின் நண்பரும், பத்திரிக்கையாளருமான கவுரி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கிரிஷ் கர்நாட் மற்றும் சில எழுத்தாளர்களை கொல்ல திட்டமிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.