தனுஷ் - சினேகாவின் ரொமான்டிக் வீடியோ பாடல்!

திங்கள், 2 மார்ச் 2020 (19:08 IST)
பொங்கல் தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 16ம் தேதி வெளியான படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்திருந்தனர். 
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் நல்ல வரவேற்பு பெற்ற "பிரியாத என்ன " என்ற பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. விஜய் யேசுதாஸ் , நிரஞ்சனா  பாடிய இந்த பாடல் வரிகளை கார்த்திக் எழுதியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்