இந்நிலையில் சமீபத்தில் பார்வதி அளித்த ஒரு நேர்காணலில் “நான் பூ படம் நடிக்கும் போது எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. இடைவேளை நேரங்களில் இயக்குனர் சசி, அந்த சிறுகதையை எனக்குப் படித்துக் காட்டிக் கொண்டே இருப்பார். தமிழ் புரியாது என்றாலும் அது தாலாட்டு பாடுவது போலவே இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் கண்ணியம்தான் முக்கியம். இந்த சினிமா துறையில் கூட கண்ணியம் இல்லாவிட்டால் நான் இதில் இருந்து விலகிவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.