இயக்குனர் பி வாசு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். ரஜினி, அஜித் என சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து படம் இயக்கியவர். இவர் இன்று காலை சென்னை கோடம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது வீட்டில் வசிப்பவர் 10 மாதங்களாக வசித்து வரும் ஜானகி என்ற பெண் மாத வாடகையான 75,000 ரூபாயைத் தராமல் ஏமாற்றுவதாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்