பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ரண்வீர் சிங். இவர், பத்மாவதி, கல்லிபாய், 83 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள் இதைப் பாராட்டினாலும், ரண்வீரின் நிர்வாணா போஸுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும் விமர்சனமும் குவிந்து வருகிறது.
இற்கு பாலிவுட் முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் ரண்வீர்சிங்குக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து வந்தாலும், சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் ரண்வீர் சிங் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்தி சினிமாவின் நம்பர் 1 நடிகையும், ரண்பீர் கபூரின் மனைவியுமான ஆலியாபட் தற்போது ரண்வீர் சிங்கிற்கு ஆதர்வு தெரிவித்துள்ளார்.
டார்லிங்ஸ் என்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆலியாபட் ரன்வீர் சிங்கிற்கு எதிராக விமர்சனத்தை கேட்க எனக்கு விருப்பமில்லை. என் சக நடிகைகள் மீதான புகாரை என்னால் ஏற்க முடியாது, அவரை எல்லோருக்கும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.