பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ .. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (17:36 IST)
என்.டி.ஆர் பாலகிருஷ்ணா நடித்த  ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாளில் உலக அளவில் ரூ.32.33 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலகிருஷ்ணாவின் 108-வது படமான ‘பகவந்த் கேசரி’படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடித்துள்ள இந்த படத்தில் சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் நேற்று உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் நாளில் உலக அளவில் ரூ.32.33 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.54 கோடி வசூலித்திருந்த நிலையில் இந்த படம் வசூலில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்