த்ரிஷாவின் முன்னாள் காதலருக்கு அடுத்த மாசம் கல்யாணம்…

செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (10:57 IST)
த்ரிஷாவைத் திருமணம் செய்துகொள்ள இருந்த வருண் மணியனுக்கு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

 
தொழிலதிபரான வருண் மணியன், சில படங்களைத் தயாரித்து இருக்கிறார். அவருக்கு, த்ரிஷாவுக்கும் திருமணம்  நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திருமணம் நடைபெறாமல் நின்றுபோனது. ‘திருமணத்துக்குப் பிறகு த்ரிஷா நடிக்கக்  கூடாது’ என்று வருண் மணியன் கட்டளை போட்டதால் திருமணம் நின்றது என்றார்கள்.
 
இந்நிலையில், வருண் மணியனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அரசியல்வாதிகளான கே.பி.கந்தசாமியின் பேத்தியும், கே.பி.கே.குமரனின் மகளுமான கனிகா குமரனை அவர் திருமணம் செய்ய உள்ளார். கடந்த சில மாதங்களாக  அவர்கள் டேட்டிங் செய்து வந்தனர். தற்போது இருவீட்டாரின் சம்மதத்தின்படி இந்தத் திருமணம் நடைபெற உள்ளது. கனிகா  குமரன், ஃபேஷன் மேகஸின் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்