இப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ஆனால், இன்னும் ரஸ்யாவில் எடுக்க வேண்டிய காட்சிகள் உள்ளதால், கேரளாவில் நடக்கும் ஷூட்டிங் வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும், அடுத்தகட்ட ஷூட்டிற்காக 'தி கோட்' படக்குழு ரஷ்யா செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இப்படத்தில், யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.