முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க நாசர் போன்ற சீனியர் நடிகர்களை அணுகுவார்கள். சிலநேரம் நட்புக்காக சின்ன வேடங்களில் நடிக்க வேண்டிவரும்.
ஆனால், கோ 2 படத்தில் நாசர் நடித்துள்ள வேடத்தைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி. காமா சோமா நடிகர்களே போதும் என்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருந்தார். இந்த வேடம் குறித்து நாசரின் மனைவி கமீலா நாசரும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
"படத்தில் முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க தயவு செய்து நாசரை அழைக்க வேண்டாம்.
‘கோ 2’ படம் குறித்து எனக்கு வரும் அழைப்புகளால் இதை தெரிவிக்கிறேன். நட்புக்கு மரியாதை கொடுங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் மற்றவர்களைவிட நாசர் உஷாராக இருப்பதுதான் நல்லது, அதுதான் சரியும்கூட.