வெளியானது நரகாசூரன் அசத்தல் டீசர்...

சனி, 25 நவம்பர் 2017 (17:53 IST)
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிவுள்ள நரகாசூரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. துருவங்கள் 16 படத்தை இயக்கிய இளம் இயக்குனரன கார்த்திக் நரேனுகு முதல் படத்தில் பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் திருப்தியான வசூல் ஆகியவற்றால் உடனடியாக அவருக்கு அடுத்த பட வாய்ப்பும் கிடைத்தது. 
 
அரவிந்த் சாமி அடுத்ததாக நடிக்கும் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வணங்காமுடி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தைத் தொடர்ந்து அரவிந்த் சாமி நடிக்கும் படம் இது. 
 
படத்தில் சுந்தீப் கிஷண், இந்திரஜித், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார். 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்