கணவருடன் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மைனா நந்தினி - வீடியோ!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (14:54 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். அழகான மறுவாழ்வை தனது கணவருடன் துவங்கியிருக்கும் மைனா நந்தினிக்கு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் குழந்தை பிறந்த சில நாளில் மீண்டும் ஷூட்டிங்கில் இணைந்துள்ள மைனா நந்தினி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். இதில் அவரது கணவர் யோகேஷும் நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ready Camara rooooooolllllllllliiinnngggggg sir action Shoot mode start

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்