இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனுஷின் பவர் பாண்டி படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார். அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் பெரிய வெற்றி பெற்றன. அதனால் தனுஷின் வி ஐ பி 2 படத்திலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் பாடல்கள் மிகவும் சுமார் என்று விமர்சனங்கள் வந்தன. அது சம்மந்தமாக தனுஷ் ரசிகர்கள் அவரைக் கேலி செய்து வந்தனர். மேலும் இனிமேல் தனுஷ் படங்களுக்கு இசையமைக்க வேண்டாம் எனக் கூறிவந்தனர்.
இதுபோல தொடர்ச்சியான பதிவுகளால் கடுப்பான ரோல்டன் விஐபி படத்தின் பணிகள் முடிக்கப்பட எனக்கு 3 நாட்களே கொடுக்கப்பட்டன. தனுஷ் சார் இதைப் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் சில இதயமில்லாதவர்கள் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவருடன் தனித்துவமான பல படங்களில் தொடர்ந்து பணிபுரியவுள்ளேன். ரசிகர்களுக்கு உற்சாகமான இசையைக் கொண்டு வருவேன் எனக் கூறியுள்ளார்.