நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். மிருதன் தமிழில் முதல் ஸோம்பி வகை திரைப்படமாக இருந்தது.
இந்நிலையில், மிருதன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார் இயக்குனர். 'மிருதன் 2' வருவது உறுதி. ஆனால், 'சங்கமித்ரா' படத்துக்காக ஜெயம் ரவி ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சங்கமித்ரா புராஜெக்ட் முடித்த பின்பு, மிருதன் 2 ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார்.