மேலும் மீரா மிதுனுடன் சாக்ஷி, அபிராமி இருவருக்கும் பல்வேறு சண்டைகளும் வெடித்தன. இதனால் அபிராமி இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதே எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி அதற்கான காரணத்தை சொன்னார். அதாவது, மீராமிதுன் பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டதாக கூறினார். ஆனால் , மீராமிதுன், நான் தான் அபிராமியை தான் மாடலிங் துறைக்கு அறிமுகம் செய்தேன் என்றும் கூறியிருந்தார். பின்னர் அவர் மக்களால் சேரன் விஷயத்தில் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
ஆனால் தற்போது பிக்பாஸில் வெளியேறிய மீரா மிதுன் மற்றும் சாக்க்ஷி இருவரும் ஒரு பேஷன் ஷோவில் பங்கு பெற்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் எதிராளியாக இருந்த இருவரும் தற்போது ஒரு நிகழ்ச்சியில் சேர்ந்து பங்கேற்றிருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.