எங்கள் படம் ட்ராப் செய்யப்படவில்லை… இயக்குனர் மகேஷ் நாராயணன் லேட்டஸ்ட் தகவல்!

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (08:15 IST)
விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மகேஷ் நாராயணன் c u soon மற்றும் மாலிக் ஆகிய படங்களின் மூலமாக வெற்றிகரமான இயக்குனராக அறியப்படுபவர்.

ஆனால் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படம் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் அடுத்தடுத்து ஹெச் வினோத், மணிரத்னம், வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தகவலை மறுத்துள்ளார் மகேஷ் நாராயணன். மேலும் அவர் “இந்த படத்துக்கான திரைக்கதையை கமல் எழுதி வருகிறார். ஆனால் அவர் இப்போது அவர் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் தாமதம் ஆகி வருகிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்