நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்த ‘மாமன்னன்’ படக்குழுவினர்!

வியாழன், 19 மே 2022 (09:15 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நாளை நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘UA’ சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் மே 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை மாமன்னன் படக்குழுவினர் பார்த்துள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோருக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்