அதனால் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகளவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதையடுத்து அப்படி அவர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸான படம்தான் குட்லக் சகி. ஒரு ஆண்டுக்கு முன்பே தயாரானாலும் கொரோனா காரணமாக ரிலிஸ் தள்ளி தள்ளி ஒருவழியாக கடந்த வாரம் வெளியானது.