கீர்த்தி சுரேஷ் பட இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸ் !
செவ்வாய், 18 மே 2021 (22:07 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் தற்போது ராதே ஷியாம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.
அடுத்து, மகாநடி என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார் பிரபாஸ். இப்படம் சயின்ஸ் திரில்லர் கலந்து உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
ஆனால் இப்படத்தை இந்த ஆண்டில் பரவிவரும் கொரொனா இரண்டாம் அலையால் ஷுட்டிங் நடத்தமுடியாது எனவும் இது அடுத்த ஆண்டில் ஜனவரி மாதம் தான் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஜனவரி 2022 ல் தொடங்கி 2023ல் ரிலீஸ் செய்ய பிரபாஸ் முடிவெடுத்துள்ளார்.
இப்படத்தை முடித்த பின்னர்தான் பிரபாஸ் கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல்ஸ் சலார் படத்தில் நடிக்கவுள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது