கடந்த ஆண்டு விஜய், விக்ரம், விஷால், என பெரிய நடிகர்களுடன் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு இன்னும் ஒரு தமிழ்ப் படத்தில் கூட ஒப்பந்தமாகவில்லை. இருப்பினும் போனிகபூர் தயாரிப்பில் அவர் பாலிவுட் செல்லவுள்ளார். அந்த படம் ஹிட்டானால் அவரை தென்னிந்திய சினிமாவில் இனி பார்ப்பது கஷ்டம்தான் என கூறப்படுகிறது. ஏனெனில் இப்போதே அவர் இன்னும் ஒரு இந்தி படத்திற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
இந்த நிலையில் 'மேயாத மான்', 'மெர்க்குரி' ஆகிய படங்களை தயாரித்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக ஒரு அதிரடி மர்ம திரைப்படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் தான் என்றும் கூறப்படுகிறது. ஹீரோவே இல்லாத இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கேரக்டரை சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறது என்பதால் அவரிடம் இருந்து பல்க் காஷீட்டை பெற்று கொண்ட கார்த்திக் சுப்புராஜ், ஒரு பெரிய தொகையை சம்பளமாகவும் கொடுக்க சம்மதித்துள்ளாராம்.