பிரம்மாண்ட வளாகம்... ஆச்சரியத்தில் ஆழ்த்திய கத்ரீனா கைஃப் விக்கி திருமணம்!

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:57 IST)
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் இந்தி சினிமா துறையில் டாப் நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் மார்கெட்டின் உச்சத்தில் இருந்து வரும் 2003ம் ஆண்டு வெளியான "பூம்" திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

அதையடுத்து அவருக்கு பல்வேறு படங்கள் தொடர் ஹிட் அடித்து பேரும் புகழும் பெற்றுத்தந்தது. இதனிடையே சல்மான் கான், ரன்பீர் கபூர் என பல முன்னணி நடிகர்களின் காதல் வலையில் சிக்கி பின்னர் கழட்டிவிடப்பட்டார். 
இதையடுத்து நடிகை விக்கி கௌஷலை காதலித்து வந்த கத்ரீனா கைப் இன்று அவரை திருமணம் செய்துக்கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெற்ற தங்களது திருமண புகைப்படங்களை தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்