இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காந்தாரா சாப்டர் 1 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படம் கன்னடா, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஆராய்ச்சிகளை ஒரு ஆண்டாக ரிஷப் ஷெட்டி செய்து வந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் ப்ரோமோ டீசர் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் குளிகா பூமிக்கு வருவதும், பஞ்சுருளியுடனான மோதலையும் மையப்படுத்திதான் இந்த கதை இருக்கும் என இப்போதே ரசிகர்கள் தியரிகளை உருவாக்க தொடங்கி விட்டனர். ப்ரோமோவில் கையில் சூலம், கழுத்தில் ருத்திராட்சம் என சிவபெருமான் தோற்றத்தில் ரிஷப் ஷெட்டி காட்சியளிப்பதும் பல்வேறு சிந்தனைகளை எழுப்பியுள்ளது. காந்தாரா முதல் பாகத்தை விட பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் இந்த ப்ரோமோவினால் இப்போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.