சிறு வயதில் என்னை ஒருவர் தவறாக தொடுவார்... பாலியல் தொல்லைக் குறித்து பேசிய கங்கனா!

திங்கள், 25 ஏப்ரல் 2022 (15:27 IST)
கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் லாக் அப் நிகழ்ச்சியில் இந்த வாரம் தான் சந்தித்த பாலியல் தொல்லைக் குறித்து பேசியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். ஆனால் வாயைத் திறந்தாலே சர்ச்சைதான். பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வது வாடிக்கை.

இதையடுத்து இப்போது அவர் ஓடிடிக்காக லாக் அப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது அந்த நிகழ்ச்சியில் தான் சிறுவயதில் சந்தித்த ஒரு மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ள அவர் “சிறுவயதில் நான் வசித்த கிராமத்தில் வசித்த ஒருவர், என்னை அடிக்கடி தவறாக தொடுவார். அவர் எங்களை விட 4 வயது பெரியவர். அதுபோல என் வயதுள்ளவர்களை அழைத்து வந்து ஆடைகளை அவிழ்க்க சொல்வார். அப்போது எங்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. குடும்பத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. எல்லோரிடமும் நல்ல தொடுதல் குறித்து பேசி விளக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்