யார் சங்கி? அதிமுக, திமுகவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்!

திங்கள், 7 டிசம்பர் 2020 (14:19 IST)
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக சமீபத்தில் கமலஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டதை அடுத்து அவர் சங்கி என்றும் பாஜகவின் பி டீம் என்றும் நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்தனர் 
 
இந்த வசனத்திற்கு தக்க தக்க பதிலடி கொடுத்து கமல்ஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:  
 
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. 
 
வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
 
தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். 
 
ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.
 
 

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.
திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
(1/2)

— Kamal Haasan (@ikamalhaasan) December 7, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்