மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளார். அதையடுத்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகிவிட்டனர். இந்த சம்பவங்களுக்கு பின்னர் கமல் கட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.