2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் மனித இனம் கஷ்டப்பட்ட நிலையில், இந்த ஆண்டிலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் திரை உலக பிரமுகர்கள் உள்பட அனைவரும் நேற்று புத்தாண்டு தினத்தை மிக சிறப்பாக கொண்டாடினர் என்பதும் உறவினர்கள் நண்பர்கள் உடன் அவர்கள் கொண்டாடியதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம், பிக்பாஸ், படப்பிடிப்பு என பல்வேறு பணிகளுக்கு இடையே கமல்ஹாசன் அவர்கள் நேற்று தனது மகள் அக்ஷராஹாசன் உடன் புத்தாண்டை கொண்டாடி உள்ளார். இதுகுறித்து அக்ஷரா ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அப்பா கமலை கட்டி பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து புத்தாண்டை அப்பாவுடன் கொண்டாடினேன் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்