இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முதலாக உருவாக்கியுள்ள வெப் சீரிஸாக லைவ் டெலிகாஸ்ட் (நேரடி ஒளிபரப்பு) வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த தொடரில் காஜல் அகர்வால், வைபவ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
நேரடி ஒளிபரப்பு ஒன்றுக்காக செல்லும் படக்குழு அங்கே பேயிடம் மாட்டிக் கொண்டு எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. இந்த சீரிஸூக்காக மலைமேல் இருக்கும் வீடு ஒன்றில் படம்பிடிக்க அந்த இடம் உண்மையாகவே பயமுறுத்தும் விதமாக இருந்துள்ளது. அதனால் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் தன்னால் அந்த இடம் தந்த பயத்தால் தூங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.