டினு பாப்பச்சன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘ஸ்வாதந்த்ரியம் அர்த்த ராத்திரியில்’. ‘அங்கமாலி டயரீஸ்’ படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ் தான் இந்தப் படத்திலும் ஹீரோ. இந்தப் படம் நடிகர் ஜீவாவுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த ஜீவாவுக்குப் பிடித்துவிட, தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டினு பாப்பச்சனே தமிழில் இயக்கப் போகிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.