போனிகபூர்-ஸ்ரீ தேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜய் தேவர்கொண்டா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கரண்ஜோஹர் தயாரிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு ஜனவரி 1ம் தேதி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த ஜான்வி கபூர் தென்னிந்திய நடிகர்களில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தேவரகொண்டா என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது